Saturday, 3 December 2016

14 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 9-வது பட்டமளிப்பு விழா உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என அமைச்சர் பெருமிதம்

14 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 9-வது பட்டமளிப்பு விழா உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என அமைச்சர் பெருமிதம் | தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தின் 9-வது பட்ட மளிப்பு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ் தலைமை வகித்தார். விழாவில் 3,522 முதுநிலைப் பட்ட மாணவர் கள், 7,659 இளநிலை பட்ட மாண வர்கள், 2,725 பட்டய மாணவர்கள், 154 முதுநிலை பட்டய மாணவர்கள் என மொத்தம் 14,060 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள், பட்டயங்களை அவர் வழங்கினார். பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 142 பேருக்கு தங்கப் பதக்கமும், 2,3-வது இடங்களைப் பிடித்த 256 பேருக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன. காமன்வெல்த் கல்விக் கழகத் தின் ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையம் சார்பில் இந்த ஆண்டுக்கான 'செம்கா' விருது, இளநிலை கணினிப் பயன்பாடு பாடம் பயின்ற மாணவி இரா.முத்துவுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்தி, ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். அவர் பேசும்போது, ''தற்போது பல்கலைக்கழக மானி யக்குழு அனுமதியுடன் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 130 படிப்புகள் வழங்கப்படுகின்றன. 4.50 லட்சம் பேர் படிக்கின்றனர். 2015-16-ம் கல்வியாண்டில் 26,332 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். வரும் 2017-18-ம் கல்வியாண்டில் புதிதாக 26 படிப்புகள் தொடங்கப்பட உள்ளன'' என்றார். மாநில உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.பி.அன்பழகன் வாழ்த்துரை வழங்கிப் பேசியதாவது: உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரி யான 23.6 சதவீதத்தைத் தாண்டி தமிழகம் 44.8 சதவீதத்தைப் பெற்று முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் தொலைநிலைக் கல்வியில் படிக்கின்றனர். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மாண வர்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெறும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மென்திறன் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 15 லட்சத்து 95 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைத்திறனில் தமிழகத்தின் பங்கு 16 சதவீதம். நாட்டின் உள் நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 8.4 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அவர் பேசும் போது, ''தமிழகத்தில் 1,328 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 9 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 464 தொழில்நுட்பக் கல்லூரிகள், 553 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் சமூகரீதி யாக ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு தரமான உயர்கல்வி வழங்குவதற்காக 2002-ல் இப் பலைக்கழகம் தொடங்கப்பட்டது. வாழ்வின் நற்பண்புகளை போதித்து, வாழ்வின் புதிய உச்சங்களைத் தொட உங்களை ஊக்கப்படுத்துவதுதான் கல்வி. நீங்கள் இனி பணியாற்றப் போகும் நிறுவனத்தை ஒரு கோயிலாகவும், உங்கள் பணியையே வேண்டுதலாகவும் நினைத்துச் செயல்பட வேண்டும்'' என்றார். விழாவில் உயர்கல்வித் துறை செயலர் .கார்த்திக், பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment