Monday, 21 November 2016

டெல்லியில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டதை போன்று தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

டெல்லியில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டதை போன்று தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-டெல்லியில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் வகையில் புதிய இணையதளத்தை அம்மாநில அரசு கடந்த 17-ந் தேதி தொடங்கியிருக்கிறது. குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் கட்டண கொள்ளை பற்றி பெற்றோர் புகார் செய்யலாம்.இதற்காகவே, சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில், பெற்றோர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்த பின்னர், அதற்கென கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் புகார் விவரங்களை பட்டியலிட்டு, அதை உறுதி செய்வதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு புகார் செய்தவுடன், அதற்கு அத்தாட்சியாக பதிவு எண் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, அடுத்த 15 நாட்களில் அப்புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை புகார்தாரருக்கு தெரிவிப்பார். புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளை உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய வசதியாக புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment