Sunday, 21 August 2016

இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி காலக்கெடு நீடிப்பு

இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி காலக்கெடு நீடிப்பு
ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., பதவிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற, சென்னை ராணிமேரி கல்லுாரி மற்றும் மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில்,இலவச பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.இம்மையங்களில், நடப்பாண்டு பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஆக., 8 என, அறிவிக்கப்பட்டிருந்தது; தற்போது, 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விபரம் அறிய, 044 - 2844 4995; 0452 - 2534 988 ஆகிய டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment