Thursday, 20 July 2017

அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.


அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல் | சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த ஜூன் 30-ம் தேதி அறிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவுக்கு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அளிக்காத நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு புதிய ஊதியம் அமலாகுமா என்ற சந்தேகம் உள்ளது. லோக்பால் சட்டப்படி தமிழகத் தில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. நாடாளு மன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அங்கு சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எனவே, லோக் ஆயுக்தாவை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ''லோக்பால் சட்டத்தை அமல்படுத்த எந்தப் பிரச்சினையும் இல்லை. மத்திய அரசு அதில் திருத்தம் கொண்டுவர உள்ளது. திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், தமிழகத்தில் லோக்பால் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதிய வரையறையை நிர்ணயித்த மத்திய அரசு, படிகள் தொடர்பான தெளிவான வரையறையை அளிக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரை 3 மாதங்களில் அமல்படுத்தப்படும்'' என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பு தொடக்கம் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு


வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பு தொடக்கம் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு | வேலூர் சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், ''வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்க வேண்டும் என சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ.வும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.சி.வீரமணியும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று வேலூர் சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே 5 ஆண்டு சட்டப்படி தொடங்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்'' என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை


'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை | 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் நடத்தப்படும் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் மசோதா ஒன்றும் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை தமிழக எம்.பி.க்கள் நேற்று டெல்லி மேல்-சபையில் எழுப்பினர். பூஜ்ஜிய நேரத்தின் போது இந்த கோரிக்கையை எழுப்பிய அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மாநிலத்தில் 98 சதவீதம் மாணவர்கள் மாநில கல்வித்திட்டத்தில் படிக்கும் நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி. பேசுகையில், தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைத்துக்கட்சிகளின் கோரிக்கையாகும் என்றார். மருத்துவக்கல்லூரி கட்டமைப்புகளில் மாநில அரசு முதலீடு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். 'நீட்' தேர்வில் வடஇந்திய மாணவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தென்னிந்திய மாணவர்களுக்கு கடினமான கேள்விகளும் இருந்ததாக குற்றம் சாட்டிய நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) எம்.பி., இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று தெரிவித்தார். இந்த தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.ராஜா ஆகியோரும் தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் 'நீட்' தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு மத்திய அரசின் பதில் என்ன? என்பதை விளக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார். இதற்கிடையே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எம்.பி.க்களின் இந்த கோரிக்கைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, 'இந்த விவகாரத்தில் அனைத்து பிரிவினருடனும் அரசு விவாதித்தது. இந்த பிரச்சினையில் தற்போது காலம் கடந்துவிட்டது. இது நீதிமன்ற விசாரணையிலும் இருக்கிறது. எனினும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்' என்று தெரிவித்தார். பின்னர் சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறுகையில், 'நாட்டின் அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. கடந்த ஆண்டு இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏற்கனவே நடந்தாகி விட்டது' என்றார். 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு எங்கள் கருத்து மற்றும் பதிலை அளித்துவிட்டோம் என்று கூறிய ஜே.பி.நட்டா, அது தற்போது ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் மூலம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது பொதுப்பிரிவினருக்கு இன்று (20.7.2017) நடக்கிறது


332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது பொதுப்பிரிவினருக்கு இன்று (20.7.2017) நடக்கிறது | கால்நடை மருத்துவ படிப்புகளில் 332 இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (20.7.2017) நடக்கிறது. கால்நடை மருத்துவ படிப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2017-2018-ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும்(வியாழக்கிழமை), தொழில்நுட்ப பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நாளையும்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. பொதுப்பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) 320 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி 48 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 272 இடங்களுக்கும், அதேபோல் தொழில்நுட்ப பிரிவில் 60 இடங்கள் என மொத்தம் 332 இடங்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு இதில் பொதுக்கல்வி பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) மாற்றுத்திறனாளிகளுக்கு(சிறப்பு பிரிவு) 16 இடங்களும், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு 5 இடங்களும் (ஆண்-3, பெண்-2), முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 2 இடங்களும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது. இதுபோக, மீதமுள்ள 233 இடங்களுக்கு இன்று பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 115 பேர் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டு இருக்கின்றனர். தொழில்நுட்பம் இதேபோல், தொழில்நுட்ப பாடப்பிரிவுகளான உணவு தொழில் நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள 80 இடங்களுக்கான கலந்தாய்வும் இன்று நடைபெறுகிறது. இந்த இடங்களை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது. அந்தவகையில், உணவு தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 396 பேரையும், கோழியின தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 364 பேரையும், பால்வள தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 520 பேரையும் கலந்தாய்வுக்காக அழைத்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருமான சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 19 July 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% ஒதுக்கீடு - பணியாளர் சட்டத்தில் திருத்தம்.


மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% ஒதுக்கீடு - பணியாளர் சட்டத்தில் திருத்தம் | மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசுப் பணியாளர் பணி நிபந்த னைகள் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 19 முதல், அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, சட்டத் திருத்த மசோ தாவை பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தாக்கல் செய்தார். அரசால் வரையறுக்கப் பட்ட அளவு ஊனமுள்ளவர் களுக்கான ஒதுக்கீடு, அரசால் ஒவ்வொரு துறையிலும் கண்டறியப்பட்ட பதவிகள் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊனம் கொண்ட தகுந்த நபர் கிடைக்காத பட்சத்தில், வெவ்வேறு வகை மாற்றுத்திறன் கொண்டவர்களால் அந்தப் பணியிடங்கள் நிரப் பப்பட வேண்டும். அந்த ஆண் டில் அப்பதவிக்கான நபர் கிடைக் காத பட்சத்திலேயே, ஊனமுற்றவர் அல்லாத பிறரால் நிரப்பப் படவேண்டும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் தொடர்பான புதிய வரையறைகளும் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல, அரசின் கொள் முதல் திறனை மேம்படுத்தவும் செலவை குறைக்கவும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதாவையும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தாக்கல் செய்தார். வரையறுக்கப்பட்ட ஊனம் கொண்ட தகுந்த நபர் கிடைக்காத பட்சத்தில், வெவ்வேறு வகை மாற்றுத்திறன் கொண்டவர்களால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்காதது ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.


மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்காதது ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம் | சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), 'கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். லேப்-டாப் வழங்கப்பட்டு இருந்தால் கல்லூரிகளில் கணினி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்து இருக்கும்' என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், 'இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. அந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FREE BUS PASS | பஸ் பாஸ் வழங்கப்படும் வரை சீருடையில் வரும் மாணவ-மாணவிகள் பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.


இதுவரை 27½ லட்சம் பேர் விண்ணப்பம்: அடுத்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அதிகாரிகள் தகவல் | பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் கேட்டு இதுவரை 27½ லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் பஸ் பாஸ் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் கட்டணமில்லா கையடக்க இலவச பஸ் பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. 2016-2017-ம் கல்வியாண்டில் ரூ.504 கோடி செலவில் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மாணவ-மாணவிகள் இலவச பஸ் பாஸ் அட்டைகள் பெற்று பயன் அடைந்தனர். நடப்பு கல்வியாண்டில் (2017-2018) இந்த திட்டம் குறித்து போக்குவரத்து ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- 2017-2018-ம் கல்வியாண்டில் இதுவரை 27½ லட்சம் பேர் இலவச பஸ் பாஸ் கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களுக்கு கையடக்க இலவச பஸ் பாஸ் அட்டைகள் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இந்த மாதம் அல்லது ஆகஸ்டு மாத இறுதிக்குள் இந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவிடும். சென்னை மண்டலத்தை பொறுத்தவரையில் கடந்த கல்வியாண்டில் 3 லட்சத்து 61 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களில் 58 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பஸ் பாஸ் தயாராகிவிட்டது. பஸ் பாஸ் வழங்கப்படும் வரை சீருடையில் வரும் மாணவ-மாணவிகள் பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BSMS ADMISSION 2017 | சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது


சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இல்லை என்பதால் கடும் போட்டி இருக்கும் | சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் இல்லை என்பதால் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த பிரச்சினையால் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிவடையும் போது சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் நேச்சுரோபதி போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சித்தா போன்ற மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சித்தா போன்ற மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் நேச்சுரோபதி ஆகிய மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என 1500-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அனுமதி கிடைக்காத தனியார் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் அதிகரிக்கும். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து ஒரு மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்படும். கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு தான் இந்திய மருத்துவ கவுன்சில் எத்தனை இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்பது தெரியவரும். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தினால் பல மாணவர்களால் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் நேச்சுரோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ்-2 கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு இந்த படிப்புகளில் சேர கடும் போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 18 July 2017

என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி


என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி | என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 518 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 692 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 725 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் பதிவு செய்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 988 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். என்ஜினீயரிங் கலந்தாய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 21-ந் தேதி நடைபெறுகிறது. அவர்களில் அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் 19, 20-ந் தேதிகளில் அசல் விளையாட்டு சான்றிதழ், பதக்கத்தை கொண்டுவந்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படாதவர்களும், வராதவர்களும் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது. 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தினமும் காலை 7 மணிக்கு கலந்தாய்வு தொடங்கி இரவு வரை நடைபெறும். எனவே காலையிலேயே நடைபெறும் கலந்தாய்விலும், இரவு நேரத்தில் நடைபெறும் கலந்தாய்விலும் பங்கேற்க இருப்பவர்கள், விரும்பினால் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படித்து முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான முயற்சியை அரசு எடுத்துக்கொண்டு இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்த சிலர், மருத்துவ படிப்புக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி அவர்கள் சென்றால் ஏற்கனவே தேர்ந்தெடுத்த என்ஜினீயரிங் படிப்புக்கான இடம் காலியாகவே இருக்கும். அடுத்த ஆண்டு முதல் இந்த குளறுபடியை போக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைசியாக 2012-2013-ல் என்ஜினீயரிங் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 3 ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றி அமைக்கலாம் என்றாலும், கடந்த 5 ஆண்டுகளாக கட்டணத்தை மாற்றவில்லை. இந்த ஆண்டு தான் கட்டணத்தை மாற்றி இருக்கிறோம். என்ஜினீயரிங் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக யாராவது புகார் கொடுத்தால் கட்டண நிர்ணயக்குழுவுக்கு அதை அனுப்பி, அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை | மருத்துவ படிப்பில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கி பிறப்பித்த அரசாணையை, தனி நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதமுள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, அரசாணையை ரத்து செய்து 14-ந் தேதி உத்தரவிட்டார். நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 17 July 2017

நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீடு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 6,709 பேர் தகுதி.


நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீடு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 6,709 பேர் தகுதி | உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நாடுமுழுவதும் நடந்த நீட்-எஸ்எஸ் தேர்வில் 6,709 பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு (Dm, Mch) 1,215 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் இருக்கின்றன. இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு முதல் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (NEET-SS) கடந்த மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. தேசிய தேர்வு வாரியம் நடத்திய நீட்-எஸ்எஸ் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் டாக்டர்கள் 1,200 பேர் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், நீட்-எஸ்எஸ் தேர்வு முடிவுகள் www.nbe.edu.in என்ற தேசிய தேர்வு வாரிய இணையதளத்தில்  வெளியிடப்பட்டது. இதில் நாடுமுழுவதும் இருந்து தேர்வு எழுதியவர்களில் 6,709 பேர் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க தகுதி பெற்றுள்ளனர். நீட்-எஸ்எஸ் தேர்வில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. கலந்தாய்வு உள்ளிட்ட விவரங்களுக்கு www.mcc.nic.in மற்றும் www.mohfw.nic.in என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். கட்-ஆப் மதிப்பெண்: நீட்-எஸ்எஸ் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க, தேர்வில் முதலிடம் பிடித்தவர் எடுத்த மதிப்பெண்ணில் 50 சதவீத மதிப்பெண் (கட்-ஆப்) தகுதியாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. கட்-ஆப் மதிப்பெண் 78.25 முதல் 137.50 வரை எடுத்துள்ளனர். தேர்வில் அதிகபட்சமாக பொது மருத்துவம் படிக்க 2,294 பேரும், பொது அறுவைச் சிகிச்சை படிக்க 2,354 பேரும் தகுதி பெற்றுள்ளனர். DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (17.7.2017) தொடங்குகிறது. 1.20 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்


பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் 1.20 லட்சம் இடங்கள் நிரப்பப்படும் | பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 523 பொறி யியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பொதுவாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு பிரச்சினையால் மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில், பொறியியல் படிப் புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். அவர்கள் அனைவரும் கலந் தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். முதல்கட்டமாக இன்றும், நாளையும் தொழிற்கல்வி பிரிவுக்கான கலந் தாய்வு நடக்கிறது. 19-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும், 19, 20 தேதிகளில் விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் 21-ல் விளையாட்டு பிரிவு கலந்தாய்வும் நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ல் முடிகிறது. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் இணையதளத்தில் பதிவேற் றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். காலை 7 மணிக்கு நடக்கும் கலந் தாய்வில் கலந்துகொள்ள வெளியூர் களில் இருந்து வரும் மாணவர்கள், ஒரு நாள் முன்னதாக வந்து, பல்கலைக்கழக விடுதியில் தங்கிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாணவர்கள், பெற்றோரின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் பல்கலைக்கழக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன  DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 16 July 2017

அரசு, உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு கலந்தாய்வு நாளை (17.7.2017) தொடங்குகிறது


அரசு, உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு கலந்தாய்வு நாளை (17.7.2017) தொடங்குகிறது | அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப் பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் 7 அரசு கல்வியி யல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி களும் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்பில் 1,753 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) மேற்குறிப்பிட்ட அரசு ஒதுக் கீட்டு பி.எட். இடங்களில் சேர 5,733 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரி சீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக கலந்தாய்வை நடத்தவுள்ள சென்னை லேடி வெலிங்டன் கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வரும், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாள ருமான பேராசிரியர் எஸ்.கலைச் செல்வன் வெளியிட்டுள்ள அறி விப்பில் கூறியிருப்பதாவது: பி.எட். சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண், பாடப் பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந் தாய்வு, ஜூலை 17-ம் தேதி (திங்கள் கிழமை) தொடங்கி ஜூலை 22-ம் தேதி முடிவடையும். கலந்தாய்வு கால அட்டவணையை இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இருந்தும், அழைப்புக்கடிதம் கிடைக்கப் பெற வில்லை என்றால் குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் தேவை யான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு வருவோர் அனைத்து சான்றிதழ்கள், அவற் றின் நகல்கள், கலந்தாய்வுக் கட்டணமாக ரூ.2000-க்கான டிமாண்ட் டிராப்ட் ("The Secretary, Tamilnadu B.Ed. Admission 2017-18" என்ற பெயரில்) ஆகியவற் றைக் கொண்டுவர வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.1,000-க்கு டி.டி. எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNEA Counselling 2017 – Download Call Letter, Schedule & Procedure | பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு ஆன்லைனில் அழைப்புக் கடிதம்


TNEA Counselling 2017 – Download Call Letter, Schedule & Procedure | பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு ஆன்லைனில் அழைப்புக் கடிதம் | பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து, பொது கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு அழைப்புக் கடித்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஜெ.இந்துமதி அறிவித்துள்ளார்  DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

M.ED ADMISSION 2017 | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக எம்.எட். கல்வியியல் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.


M.ED ADMISSION 2017 | எம்.எட். கல்வியியல் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் எம்.எட். படிப்பை புதிதாகத் தொடங்குகிறது. இதில் 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஜூலை 17-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 18-ம் தேதி முடிவடைகிறது. படிப்புக் கட்டணம் முதல் ஆண்டு ரூ.5,945. இரண்டாம் ஆண்டு ரூ.4,640. கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnteu.in) தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திரநாத் தாகூர் அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது


ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது | சென்னை புத்தகத் திருவிழா ராயப் பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற் பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் சென்னையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 'சென்னை புத்தகத் திருவிழா-ஜூலை 2017' நடைபெற உள்ளது. 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இதில், 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்கான புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இந்த புத்தகக் கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்காத நிலையில், தமிழ் பதிப்புலகம் நலிந்த நிலையில் உள்ளது. இத்துறையின் வளர்ச்சி தற்போது வாசகர்களை மட்டுமே நம்பி உள்ளது. எனவே, அதனை மேம்படுத்தவும், தமிழ் எழுத்தா ளர்கள், பதிப்பாளர்கள், வாசகர் களிடையே நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் சென்னை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. ராமானுஜர் கருத்தரங்கம் இந்த புத்தகத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் இலக்கிய நிகழ்வுகளாக கவிதை வாசித்தல், ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம், சினிமா 100-ஐ சிறப்பிக்கும் சினிமாத் துறை பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு, மார்க்ஸ் 200-ஐ சிறப் பிக்கும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். குலுக்கல் முறையில் தினந் தோறும் வாசகர்களுக்கு நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. சென்னை குறித்த பிரத்யேக புகைப்படக் கண்காட்சியும் நடை பெற உள்ளது. வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத கழிவு அளிக்கப்படும். வாசகர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி புத்தகங்களை வாங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பங்கேற்பு புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா ஜூலை 21-ம் தேதி காலை 10 மணியளவில் நடை பெற உள்ளது. இதில், தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற் பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் கூறினார். 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்காண புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 15 July 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் Digital Locker மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்


பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் | அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் மின் ஆவணக் காப்பகத்தின் (Digital Locker) மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு மதிப்பெண் சான்றிதழ் களை மின் ஆவணக் காப்பகம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் மாணவர்கள் மின் ஆவணக் காப்பகத்தின் இணையதளத்துக்குள் (www.digilocker.gov.in ) சென்று, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்தி மின் ஆவணக் காப்பகக் கணக்கை முதலில் தொடங்க வேண்டும். ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்கப்படாத பட்சத்தில் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்து மின் ஆவணக் காப்பகக் கணக்கை தொடங் கலாம். மின்னணு மதிப்பெண் சான்றிதழ் களை மின் ஆவணக் காப்பகக் கணக்கு மூலமாகப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை அரசு தேர்வுத்துறை யின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்து கொள்ளலாம், மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு இச்சான்றி தழை இணையதள வழியாகவும் சமர்ப் பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மின்னணுச் சான்றிதழ், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து மின்னணு முறையில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளப்படுவதால், மதிப் பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை பெற்று பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிக்க அரசு முடிவு


உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை பெற்று பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிக்க அரசு முடிவு | பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து நியமிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார்கள் வந்தன. இதையடுத்து, அப்பள்ளி களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் கட்டணங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றியது. இச்சட்டப்படி கட்டணங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டு வந்தது. இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு வந்தார். சட்டத்தில் திருத்தம் இந்நிலையில், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு தலைவரை அரசே நேரடியாக நியமிக்காமல், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தனியார் பள்ளிகள் கட்டணங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இதற்கான மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகப்படுத்தினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணை ரத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு | மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தஞ்சாவூரை சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் தர்னீஷ்குமார், சென்னையை சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ''மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என்று தெரிவித்திருந்தார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு இந்த வழக்கு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தில், ''கடந்த 2010-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட திருத்த விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி...... DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 14 July 2017

பி.ஆர்க். படிப்புக்கு ஆக.10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு.


பி.ஆர்க். படிப்புக்கு ஆக.10-ல் தரவரிசை பட்டியல் | உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: பி.ஆர்க். படிப்பில் சேர விரும் பும் மாணவர்கள் 'நாட்டா' என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடந்த ஆண்டு நாட்டா தேர்ச்சியைக்கொண்டும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாட்டா தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண் ணிக்கை, இப்படிப் பில் உள்ள இடங்களை விட குறைவாக உள்ளது. இதைத் தொடர்ந்து, 'நாட்டா' தேர்வைப் போன்று தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த உள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோரும் பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு அகில இந்திய கட்டிடக் கலை கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தேர்வு இந்த மாத இறுதிக்குள் நடத்தப்படும். பி.ஆர்க். படிப்புக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 19-ல் கலந்தாய்வு நடைபெறும் என்றார். தமிழகத்தில் பிஆர்க் படிப்பில் 2,720 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. இவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE